தர்மஸ்தலாவில் 100 பெண்கள் கொலை! நாட்டையே அதிரவைத்த சம்பவம்! சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!
Dharmashastha harrasement Murder case
கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலுக்கு அருகேயுள்ள நிலத்தில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்தப் பகுதியில் தூய்மை பணியாளராக பணியாற்றிய ஒருவர், கடந்த ஜூன் 3ம் தேதி கர்நாடக அரசுக்கு புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களுடன் கூடிய கடிதம் எழுதி புகார் செய்துள்ளார்.
அதில், 1998 முதல் 2014 வரை பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், இதில் கோவில் நிர்வாகத்தினர் தொடர்புடையதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகிய அவர், எலும்புகளுடன் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து பெல்தங்கடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை தொடங்கினர். பின்னர், ஜூலை 13 அன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி தகவல்களை தெரிவித்தார்.
இதையடுத்து, கர்நாடக மாநில பெண்கள் ஆணையத்தலைவி முதல்வருக்கு கடிதம் எழுதியதோடு, வக்கீல்களும் முதல்வரை நேரில் சந்தித்து, சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த வழக்கு, எஸ்.ஐ.டி. விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
English Summary
Dharmashastha harrasement Murder case