BANvPAK| பாகிஸ்தானை பொளந்து கட்டிய பங்களாதேஷ்! முதல் ஆட்டமே மரண அடி!
BANvPAK t20
பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் நடக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தொடக்க போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, வங்காளதேச பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 110 ரன்களுக்கே சுருண்டது. பகத் சமான் 44 ரன்களும், அப்ரிடி 22 ரன்களும் எடுத்தனர்.
வங்காளதேச பந்து வீச்சை பொறுத்தவரை தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தி மிகச் சிறப்பாக பந்து வீசியனர்.
இதனையடுத்து வெற்றி பெற 111 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி, நிதானமாக விளையாடியது.
தொடக்க வீரர் பர்வேஸ் ஹொசைன் அரை சதம் கடந்தும், தவ்ஹித் ஹிருடோய் 36 ரன்களும் சேர்த்து அணியை இலக்கை நோக்கி அழைத்து சென்றனர்.
இறுதியில் வங்காளதேசம் 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்து வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகனாக வங்காளதேச அணிக்காக பர்வேஸ் ஹொசைன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.