விஜயலட்சுமியின் மருத்துவ பரிசோதனை நிறைவு! வசமாக சிக்கிய சீமான்! சென்னை போலீசார் அதிரடி! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்ததாகவும், திடீரென 2013 ஆம் ஆண்டு கயல்விழி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதன் பிறகு அந்த வழக்கு கிடைப்பில் போடப்பட்டது. இருப்பினும் அந்த சமாதான பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அவ்வப்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார்.

இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சீமானை கைது செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியை திருவள்ளூர் போலீசார் வரவைத்து அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதேபோன்று திருவள்ளூர் மாவட்ட நீதிபதி முன்பு ஆஜராகி விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தார். மேலும் சீமான் தன்னை கட்டாயப்படுத்தி 6 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் குற்றம் சாட்டி இருந்தார்

இந்த நிலையில் இதுகுறித்து சீமானிடம் கேட்டபோது முடிந்தால் சட்டப்படி என்னை கைது செய்து கொள்ளட்டும் என ஆவேசமாக பேசி இருந்தார். மேலும் நான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்றால் அதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு போட்டோவை கூட காண்பிக்கவில்லை என கேள்வி எழுப்பினார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடிகை விஜயலட்சுமி மருத்துவ பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த மருத்துவ பரிசோதனை நிறைவு பெற்ற 24 மணி நேரத்திற்குள் விஜயலட்சுமி வழக்கு தொடர்பாக சீமான் இன்று காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையே பணிகள் உள்ளதால் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதாக சீமான் தரப்பில் காவல் நிலையத்திற்கு விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சீமான் இன்று விஜயலட்சுமி விவகாரத்தில் நேரில் ஆஜராக மாட்டார் என்று தகவல் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai police summon Seeman to appear in Vijayalakshmi case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->