இது சட்டவிரோதம்! உதயநிதி மட்டுமல்ல ஸ்டாலினுக்கும் சேர்த்து சிக்கல்! உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அணிய வேண்டிய ஆடைகள் குறித்து கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று கோரி, புதிய வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி. பிரவீன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்வுகளில் திமுக சின்னம் மற்றும் கொடி கொண்ட டி-ஷர்ட் அணிவது அரசியல் சாசன விதிகளுக்கு முரணானது என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அரசின் பொதுநல நிகழ்ச்சிகளில் கட்சி சின்னத்துடன் கூடிய ஆடைகளை அணிவது திமுக சார்பிலேயே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக தோற்றம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும், இது கட்சிக்கு அரசியல் ஆதாயத்தை உருவாக்கும் எனவும் அவரின் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு விதிகளை துணை முதல்வர் பின்பற்றாதது சட்டவிரோதமானது என்றும், இதனால் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான ஆடை கட்டுப்பாட்டிற்கு தனித்துவமான விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் வழக்கறிஞர் பி. பிரவீன் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே, உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் கொண்ட டி-ஷர்ட் அணிவதை எதிர்த்து வழக்கறிஞர் சத்யகுமார் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது கவனிக்கத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai High court CM and DyCM Dress code new case DMK MK Stalin Udhay


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->