தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்!
chennai HC TN gOvt case
தமிழ்நாடு அரசு, முக்கிய தகவல்களையும் திட்டங்களையும் பொதுமக்களுக்கு நேரத்துக்கேற்ற வகையில் ஊடகங்கள் மூலமாக விளக்குவதற்காக, நான்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளது.
இந்தப் பொறுப்புக்காக, ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார் மற்றும் அமுதா ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள், செய்தி தகவல்களை பரப்புவதோடு, அரசுத் துறைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இந்நிலையில், இந்த நியமனங்களை எதிர்த்து வழக்கறிஞர் சத்யகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த நியமனங்கள் சட்டபூர்வமற்றது எனவும், திமுகவின் செய்தி தொடர்பாளராக இவர்கள் செயல்படுவார்கள் எனவும் அவர் வாதிட்டார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் இந்த மனுவில் எந்த விதமான வலுவான காரணமும் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்தது.
மேலும், நேரத்தை வீணாக்கியதாகக் குறிப்பிடப்பட்ட வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.