ஆளும் கட்சி போடும் தாளத்திற்கு ஏற்ப 'டான்ஸ்' போடும் தமிழக போலீஸ் - எஸ்பி வேலுமணி வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து! - Seithipunal
Seithipunal


சென்னை, கோவை மாநகராட்சிகளில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக ஆர்.எஸ் பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

அப்போது இருந்த எஸ்.பி. பொன்னி அளித்த அறிக்கையில், எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என தெரிவித்திருந்தார்.

அதிமுக ஆட்சி காலத்தில் வழக்கு பதிவு செய்யப்படாத நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் டெண்டர் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டி, எஸ்பி வேலுமணி மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தனக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்பி வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நேற்று நீதிபதிகள் பி என் பிரகாஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

அதன்படி, எஸ்பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த நீதிபதிகள், அவருக்கு எதிரான சொத்துக் குறிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்து, அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தீர்ப்பின் போது நீதிபதிகள் தெரிவிக்கையில், "ஆட்சி மாற்றத்திற்கு பின் அவசர கதியில் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்தது ஏன்? போலீசார் அதிகாரத்தை ஒரு சாராருக்கு ஆதரவாக பயன்படுத்தும்போது நீதிமன்றத்தால் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் (அதிமுக, திமுக) கட்சியின் இசைக்கு ஏற்ப நடனமாடக்கூடிய வேலையைத்தான் தமிழக போலீசார் செய்கின்றனர் என்பது இந்த வழக்கில் தெளிவாகிறது. 

காவல்துறையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்கிற உச்ச நீதிமன்ற உத்தரவை அரசுகள் அமல்படுத்தாததால், அரசியல்வாதிகளின் வழக்குகளில் காவல்துறை உயர் அதிகாரிகள் போல நீதிமன்றங்கள் செயல்பட வேண்டிய நிலை உள்ளது" என்று கருத்து தெரிவித்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC Say About DMK ADMK TN Police


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->