#Breaking || அண்மையில் முதல்வர் கொண்டுவந்த ஆணையத்துக்கு சிக்கல்? சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் பிறப்பித்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு காவல் ஆணையம் அமைக்க விதிகள் எதுவும் திருத்தப்பட்டது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது 

போலீசாருக்கும் – பொதுமக்களுக்கிடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்திடவும், புதிய பயிற்சி முறைகளைப் பரிந்துரைத்திடவும் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் சி.டி. செல்வம் அவர்கள் தலைமையில் புதிய காவல் ஆணையம்  உருவாக்கி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையே, தமிழ்நாடு காவல் சட்ட சீர்திருத்த சட்டப் பிரிவுகளை திருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏஜி மவுரியா மற்றும் சரவணன் தட்சிணாமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு காவல் ஆணையம் அமைப்பதற்காக விதிகள் திருத்தப்பட்டுள்ளதா? என்று தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், வருகின்ற ஜனவரி 31ஆம் தேதிக்குள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் தாக்கல் செய்ய ஆணை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai hc order for TNPolice Commission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->