சென்னையில் மெத்தபெட்டமையின் போதைப் பொருள் விற்பனைக்கு உடந்தை - காவலர் கைது! - Seithipunal
Seithipunal


மெத்தபெட்டமையின் போதை பொருட்கள் விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக காவலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஜேம்ஸ், அவரது நண்பர் சுரேந்தர்நாத் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்ட காவலரும், நண்பரும் வடபழனி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இருவரிடமும் 10 கிராம் மெத்தபட்டமையின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை சுட்டிக்காட்டி அதிமுகவின் ஐடி விங் பக்கத்தில், நிர்வாக திறமையற்ற பொம்மை முதல்வரின் விடியா திமுக ஆட்சியில் அவர் "நேரடி கட்டுப்பாட்டில்" இருக்கும் துறையை சேர்ந்த காவலரே போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த அவலம்.

வெறும் மேடைப்பேச்சுக்காக மட்டும் போதையில்லா தமிழகம் என விளம்பரம் செய்யும் விடியா அரசின் விளம்பர முதல்வர் தன்னுடைய துறையிலேயே நடந்த இந்த அவலத்திற்கு பொறுப்பேற்பாரா?

இனியாவது போதைப்பொருள் ஒழிப்பில் உறுதியான தக்க நடவடிக்கை எடுக்க முக ஸ்டாலின் அந்த துருப்பிடித்த இரும்புக்கரத்தை பயன்படுத்த முன்வருவாரா? என்று அதிமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Ashok Nagar Methamphetamine Police 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->