சென்னை அண்ணாநகர் சிறுமி விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? அதிமுக கேள்வி! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணாநகர் காவல் நிலைய பெண் போலீசார், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரிடம் மிரட்டி வாக்குமூலம் எடுத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 

அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை சதிஷ் என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த சிறுமியின் பெற்றோரை இரவு முழுக்க போலீசார் அடித்து துணைபுரியதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், குற்றம் சாட்டப்படும் சதிஷ் பெயரை குறிப்பிட கூடாது என்று, சிறுமியை மிரட்டும் தோணியில் பெண் போலீசார் வாக்குமூலம் என்ற பெயரில், ஏற்கனவே யாரோ சொன்னது போல, சொல்லி கொடுத்து பேச வைத்தது போல வாக்குமூலம் என்ற பெயரில் விசாரணை மேற்கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், நேற்று இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழக காவல்துறையின் விசாரணை மீது சிறுமியின் பெற்றோர் நம்பிக்கை இழந்து விட்டனர் என்று தெரிவித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர். 

இந்த சம்பவம் குறித்து அதிமுகவின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில், "10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், புகார் அளித்த பெற்றோர்கள் மீதே தாக்குதல் நடத்திய காவல்துறை பெண் அதிகாரி.

தமிழக அரசின் காவல்துறையின் மீது  அதிருப்தி அடைந்த உயர் நீதிமன்றம் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. தமிழக காவல்துறையும் , உள்துறையை கையில் வைத்துள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Anna Nagar child abuse CBI case DMK CM MK Stalin


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->