சீனர்களுக்கு விசா.. 50 லட்சம் லஞ்சம்.. கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் 7 சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 250 விசாக்கள் வாங்கி தருவதற்காக லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை, மும்பை, ஒடிசா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் 4 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI case file for Karthik Chidambaram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->