சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: சமூக நீதிக்கு வழிவகுக்கும் - துணை குடியரசு தலைவர்!
Caste Census Deputy President
சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு, சமூக நீதிக்கு வழிவகுக்கும் மாற்றத்தின் தொடக்கமாக அமையும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய புள்ளியியல் பணியாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் பேசிய அவர், "1931-ல் கடைசியாக நடந்த சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக அமைப்பின் பல அடித்தளங்களை புரிந்துகொள்ள வழி வகுத்தது.
அந்த வகையில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இது சமத்துவத்தை நோக்கி ஒரு முக்கிய முன்னேற்றமாகும்" என்றார்.
தகவல் அடிப்படையிலான திட்டமிடலின்றி வளர்ச்சி வெறும் கணிப்பே ஆகும் எனவும், புள்ளிவிபரங்கள் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வாழ்வை பிரதிபலிக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார். "வளர்ந்த இந்தியா" என்பது வெறும் கனவு அல்ல, நமக்கான இலக்கு எனவும் ஜக்தீப் தன்கர் வலியுறுத்தினார்.
English Summary
Caste Census Deputy President