அடங்காத எச்.ராஜா! மீண்டும்.. மீண்டும் வெடிக்கும் சர்ச்சை! கலவரம் தூண்டும் பேச்சு என வழக்குபதிவு! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பேசுவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது பெரியார், திமுக, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து மிகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

அவர் மீது பல்வேறு அவதூறு புகார்கள் எழுந்த நிலையில் இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எச்.ராஜா மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போது தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியுள்ளார்.

மேலும் இரு மதத்தினருக்கு இடையே மோதல் ஏற்படுத்தி கலவரம் தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். அதன் அடிப்படையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட போலீசார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

case registered against HRaja for inciting riots


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->