அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை? இன்று மதியமே விசாரணை.! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் வேட்புமனு தாக்கல், நாளை மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. 

வேட்புமனு மனுக்கள் 5ஆம் தேதி காலை பரிசீலிக்கப்படும். 6 ஆம் தேதி மாலை 4 மணி வரை மனுவை திரும்பப் பெறலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

மேலும், வாக்கு எண்ணிக்கை நடத்தி, டிசம்பர் 8ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்திலுள்ள ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளை கழக நிர்வாகிகள், பேரூராட்சி மற்றும் நகர வார்டு கழக நிர்வாகிகள், நகராட்சி வட்ட கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகள் டிசம்பர் 13ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தொடர்ந்த இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ள உயர்நீதிமன்றம், இன்று பிற்பகல் இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று, கே.சி.பழனிசாமி அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CASE AGAINST ADMK ELECTION


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->