சிக்கிய திமுக எம்.பி., மொத்த திமுக-வையும்., வச்சு செஞ்ச அதிமுக அமைச்சர்!
c ve shanmugam open talk about DMK MP Gautham Sigamani×
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 49-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியினர் நாடு முழுவதும் கோடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதேபோல் இன்று விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் விடப்பட்டது. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு, மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மலர்தூவி மரியாதை செலுத்தி, கட்சி கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது, இந்த கல்வியாண்டில் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பது வரவேற்கக் கூடியது. இருப்பினும் அரசு பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் குறைந்த அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
ரசு பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சிப்படுத்தவே, முதல்வர் பழனிசாமி அவர்களின் நடவடிக்கையால், மருத்துவ மாணவர் இட ஒதுக்கீட்டில் 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. இந்த கோரிக்கையை ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார். இதற்கு விரைவில் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம். இதனால் இந்தாண்டு 325 மாணவர்களுக்கு மேல் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம்.,த்திடம் திமுக எம்பி பொன்.கவுதமசிகாமணியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், 'இவர்கள் தான் ஊழலை ஒழிக்கப் போவதாக சொல்கிறார்கள்' என திமுகவை விமர்சித்து பதிலளித்தார்.
English Summary
c ve shanmugam open talk about DMK MP Gautham Sigamani×