பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதனிடையே, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை எம்பி பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் காலியாகும் 52 இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிக்கு ஜூன் 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 3 மக்களவை தொகுதிகள், 7 சட்டமன்ற தொகுதிக்கு ஜூன் 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

ஜூன் 26ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

by election for to 3 parliamentary and 7 assembly


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->