வாரிசு அரசியல் மோதல்! மகனா? மகளா? மகளை கட்சியிலிருந்து நீக்கிய சந்திரசேகர ராவ்!
BRS Chandrasekara Rao Kavitha
பாரத் ராஷ்ட்ர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர் சந்திரசேகர ராவுக்கும், அவரது மகள் கவிதாவுக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் கட்சிக்குள் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. சகோதரர் கே.டி. ராமா ராவுடனும் கவிதாவுக்கு கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டன.
இந்த நிலையில், கட்சி நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து, தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக கவிதா குற்றச்சாட்டு முன்வைத்தார். இதனால் பி.ஆர்.எஸ். கட்சியில் உள் அதிருப்தி அதிகரித்தது.
கட்சியின் ஒற்றுமை பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, கவிதாவை கட்சியில் இருந்து நீக்கும் முடிவை சந்திரசேகர ராவே எடுத்தார். அவர் உத்தரவின் பேரில் கவிதா பி.ஆர்.எஸ்.வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தெலுங்கானாவில் காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்ட முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பரிந்துரை செய்துள்ள சூழலில், கவிதா மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.
English Summary
BRS Chandrasekara Rao Kavitha