எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிவறை கதவை திறந்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.! பெற்றோர்களே உஷார்.! - Seithipunal
Seithipunal


கழிவறையின் கதவை திறப்பதற்கு பதிலாக, ரயிலின் மெயின் கதவை திறந்த சிறுவன் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம் : மலப்புரம் மாவட்டம், மாம்பாடு எனும் பகுதியை சேர்ந்தவர் சித்திக். இவர் தனது குடும்பத்துடன் திருவனந்தபுரத்திலிருந்து கொச்சுவேலி - நிலம்பூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயிலில் மலப்புரம் சென்று கொண்டிருந்தார்.

நள்ளிரவு சுமார் 12 மணியளவில் கோட்டையும் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, சித்திக்கின் மகன் வயது தான் முகமது (வயது 10) ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து பலியாகி பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, சிறுவன் முகமது கழிப்பறைக்கு செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டுச் சென்றுள்ளான். ஆனால் அவன் திரும்பி வராதயைடுத்து, பெற்றோர்கள் அவனை தேடினர்.

அப்போது, கழிவறை கதவு மூடிக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் ரயிலின் வாயில் கதவு திறந்து இருந்தது. இதனால் சிறுவன் கழிவறை கதவை திறப்பதற்கு பதிலாக, ரயிலின் கதவைத் திறந்து இருக்கிறான் என்று உணர்ந்த பெற்றோர்கள். உடனடியாக ரயிலின் ஆபத்து சங்கிலியை பிடித்து இழுத்தனர்.

இதனையடுத்து ரயிலில் இருந்து இறங்கி சிறுவனைத் தேடிய பெற்றவர்கள், ரயில் தண்டவாளம் அருகே சிறுவன் முகமது ஒரு கல்லில் அடிபட்டு கீழே கிடந்தான். உடனடியாக அவனை மீட்டு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்.

ஆனால் சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று கை விரித்தனர். இதனை எடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுவன் முகமதுவின் உடலை பெற்றோரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.

மேலும், இந்த விபத்து சம்பந்தமாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy dead in train at kerala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->