எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை 20-ஆம் தேதி டெல்லியில் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய பேரணியின்போது அவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வலியுறுத்தியும், அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற மக்களவை இன்று கூடியதும், கேள்வி நேரம் தொடங்கியது. ஆனாலும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் நடத்திய பேரணியின்போது அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது அனைவரும் அமைதி காக்குமாறும், கேள்வி நேரம் தொடர ஒத்துழைக்குமாறும் சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். எனினும், ''உள்துறை அமைச்சரே எங்களுக்கு பதிலளியுங்கள்'' உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நாடாளுமன்றத்தின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்யுமாறும், அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் தான் வேண்டுகோள் விடுத்தை ஓம் பிர்லா சுட்டிக்காட்டி, அமைதிப் படுத்த முயன்றார்.

அத்துடன், நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த மன்றம் என்று குறிப்பிட்ட ஓம் பிர்லா, அது நாட்டின் நலனுக்கான சட்டங்களை விவாதித்து நிறைவேற்றவே பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலேயும், நாடாளுமன்றம் முழக்கங்களை எழுப்போ அல்லது பதாகைகளை ஏந்துவதற்கான ஒரு மேடை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், போராட்டங்கள் தொடர்ந்து நீடித்ததால் அவையை மதியம் 02 மணி வரை ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார்.

இதேபோல், மாநிலங்களவை கூடியதும் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை நிதி முறைகேட்டைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், முதலில் அவையை 12 மணி வரை ஒத்திவைத்த அவை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், மீண்டும் அவை கூடியபோதும் அமளி ஏற்பட்டதால் மதியம் 02 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Both houses of Parliament adjourned due to opposition unrest


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->