பாஜக தமிழ்நாட்டில் மலரும் தருணம் வந்துவிட்டது - அண்ணாமலை பேச்சு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.பி முருகானந்த்தை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். 

மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அண்ணாமலை பேசுகையில், பாரத பிரதமர் நரேந்திர மோடியை தவிர யாராவது பிரதமரானால் இந்தியா என்னாகும் என்பதை சிந்தித்து பாருங்கள். இந்தியாவை சின்னாபின்னமாக்கி விடுவார்கள். பாஜக தமிழ்நாட்டில் மலரும் தருணம் வந்து விட்டது.மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி கம்பீரமாக வருவேன். ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து கொண்டு செல்கிறோம் என்று பேசினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp win to tamilnadu annamalai speech


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->