போதையால் தமிழகம் தள்ளாடி பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி இருக்கிறது இந்த விடியா அரசு - வானதி சீனிவாசன்! - Seithipunal
Seithipunal


பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விடுத்துள்ள கண்டன செய்தியில், "கோவையில் அரசுப் பேருந்தில் பயணித்த பெண்களிடம்  மதுபோதையில் ஆசாமி ஒருவர் தரக்குறைவாகப் பேசியும், அவர்கள் கைகளை இழுக்க முயன்ற சம்பவம் மதுபோதை கலாச்சாரத்தால் பெண்களின் பாதுகாப்பு எவ்வளவு சீர்குலைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.  

விடியா திமுக அரசோ இப்படி பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பில்லாத சூழ்நிலையை உருவாக்கிவிட்டு துளியளவும் மனதில் சஞ்சலமே இல்லாமல் ஊர்கள் தோறும் வெல்லும் தமிழ் பெண்கள் மாநாட்டை நடத்துவது கேலிக்குறியதாக உள்ளது.

மதுபோதை பிரியர்கள் மாநாட்டை வேண்டுமானால் இந்த திராவிட மாடல் ஆட்சியில் நடத்தலாம். அந்தளவிற்கு போதையால் தமிழகம் தள்ளாடி பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி இருக்கிறது இந்த விடியா அரசு" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Vanathi Srinivasan Condemn to DMK CM MK Stalin


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->