அண்ணாமலை அசந்த நேரம்... முக்கிய புள்ளியை தட்டி துக்கிய ஈபிஎஸ்!!
Bjp OBC wing state secretary joined in AIADMK
தமிழக பாஜக மாநில ஓபிசி அணி தலைவராக இருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா உட்கட்சி பூசல் காரணமாக பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் அவர் நிரந்தரமாக விழுவதாக கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார்.
அதன் பிறகு எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் இருந்த திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா அதிமுகவில் இணைய உள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

இதனால் சுதாரித்துக் கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சூர்யா கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் மீண்டும் அதே பதவியில் தொடர அறிவுத்தப்படுகிறார் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழக பாஜகவில் முக்கிய புள்ளியாகவும், அண்ணாமலைக்கு நெருக்கமானவராக இருந்த சூர்யா சிவா அதிமுகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல் அரசியல்வாதாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் சூரியா சிவா மீண்டும் பாஜகவில் தொடர்வதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக பாஜக ஓ.பி.சி அணி மாநில செயலாளர் தங்கராஜ் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த அவர் அதிமுகவில் இணைந்து கொண்டார். ஓபிசி அணி தலைவர் சூர்யா சிவாவை தக்கவைத்துக் கொண்டு அண்ணாமலை அசந்த நேரத்தில் தங்கராஜை எடப்பாடி பழனிச்சாமி தன் பக்கம் இழுத்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Bjp OBC wing state secretary joined in AIADMK