சமோஸாவுக்கு CID விசாரணை! காங்கிரஸ் ஆட்சியின் கேலிக்கூத்து - பாஜக கடும் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


சமோஸாவை காணோம் என்று CID விசாரணைக்கு ஹிமாச்சல பிரதேச காவல் துறை உத்தரவிட்டுள்ளது குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "முதலமைச்சருக்கு ஏற்பாடு செய்திருந்த சமோஸாவை காணோம் என்று குற்றவியல் காவல் துறை (CID) விசாரணைக்கு ஹிமாச்சல பிரதேச காவல் துறை உத்தரவிட்டுள்ளது காங்கிரஸ் ஆட்சியின் கேலிக்கூத்து ஆட்சியை உணர்த்துகிறது. 

ஐந்து நட்சத்திர ஓட்டலில் இருந்த வரவழைத்த சமோஸாக்கள் மற்றும் கேக்குகளை முதலமைச்சரின் கண்களில் கூட காண்பிக்காமல் அவரின் அதிகாரிகளே சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டார்கள் என்றும் இந்த மாபெரும் குற்றம் எப்படி நடந்தது என்றும் அதி தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

எத்தனையோ பல கோடிகளை ஊழல் செய்த காங்கிரஸ் அதற்கெல்லாம் எந்த விசாரணையையும் உத்தரவிடாத நிலையில், முதலமைச்சருக்கு வழங்க வேண்டிய சமோஸாக்களில் ஊழல் செய்தது யார் என்பது தான் பரபரப்பாக ஹிமாச்சல பிரதேசத்தில் இப்போது பேசப்பட்டு வருகிறது" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Narayanan Say About Himachal Samosa CID Case


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->