நெல்லை கொடூரம்: கஞ்சா மயத்தால் தமிழகத்தைக் கொலைக்களமாக்கிய திமுக அரசு! நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் மதுபோதையில் ஒரு கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதல் தமிழகத்தை உலுக்கியுள்ளது. 

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம் பெரும்பத்து பகுதியில் கஞ்சா போதையில் 6 இளைஞர்கள் டீக்கடையில் இருந்த இரண்டு பேரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளாக நகரங்கள், கிராமங்கள் என்ற வித்தியாசமின்றி திக்கெட்டும் கஞ்சா புழக்கம் அதிகரித்து, தமிழக இளைஞர்களின் வாழ்வைச் சீரழிப்பதோடு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சிதைத்து வருவது கொடூரமானது.

தனது திறனற்ற நிர்வாகத்தால் எங்கு பார்த்தாலும் கஞ்சா மயமாக்கி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையும் மக்கள் நலனையும் ஒருசேர கொன்றுவிட்டு, 'வெல்வோம் ஒன்றாக' என்று திமுக அரசு சூளுரைப்பது வெட்கக்கேடானது" என்று தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

பெரும்பத்து கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்த போதை கும்பல், கண்ணில் பட்டவர்களையெல்லாம் ஆயுதங்களால் தாக்கியுள்ளது. இந்த வெறியாட்டத்தில் மாற்றுத்திறனாளி ஜான் மற்றும் அவ்வழியாக சைக்கிளில் சென்ற ஒடிசா மாநிலத் தொழிலாளி திரிநாத் கடா ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம்: உயிருக்காகப் போராடி வரும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 65,000 கிலோ கஞ்சா மற்றும் 8,000 கிலோ செயற்கை போதைப்பொருட்கள் பிடிபட்டுள்ளன. இது பிடிபட்டது மட்டுமே; பிடிபடாமல் புழக்கத்தில் இருப்பவை இன்னும் பல மடங்கு இருக்கும்.

மதுவின் பிடியில் தமிழகம்: கடந்த 5 ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் ₹2.2 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் மது எந்தளவுக்கு ஆறாக ஓடுகிறது என்பதைக் காட்டுகிறது.

"திமுக ஆட்சியின் இறுதிக்காலத்திலாவது மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்று பார்த்தால், வன்முறையும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுமே இந்த அரசின் அடையாளமாக மாறியுள்ளது" என அண்ணாமலை சாடியுள்ளார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp nainar Annamalai Slams DMK Govt Over Nanguneri Violence and Drug Menace


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->