ரோட்டுல தொழுகை, காதை பிளக்கும் மசூதி பாங்கு ஒலி, இதற்கெல்லாம் ஒரு விளம்பரம் எடுங்களேன்.! அமீர்கான் விளம்பர சர்ச்சை.!  - Seithipunal
Seithipunal


பாலிவுட் நடிகர் அமீர் கான் நடித்துள்ள ஒரு விளம்பரம் தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதனை பாஜக கையிலெடுத்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

நாட்டின் முன்னணி டயர் நிறுவனமான சியட் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் ஒரு விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அந்த விளம்பரத்தில், தெருக்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று நடிகர் அமீர்கான் அறிவுரை வழங்குவது போல் அமைந்துள்ளது.

இதனை பாஜக எம்பி அனந்த்குமார் ஹெக்டே தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு தான் இதற்க்கு கண்டனம் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து கடந்த 14ம் தேதி சியட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனந்தவர்மன் கோயங்காவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "அண்மையில் வெளியான உங்கள் நிறுவனத்தின் விளம்பரம் இந்துக்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை நீங்கள் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் உங்கள் நிறுவனம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

அந்த விளம்பரத்தில் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று பொதுமக்களுக்கு நடிகர் அமிர்கான் அறிவுறுத்துவது போல் அமைந்துள்ளது. இது நல்ல செய்தியை தருகிறது. பொதுப் பிரச்சினைகள் குறித்து உங்களின் பார்வை பாராட்டுக்குரியது. அதில் மாற்றம் இல்லை.

ஆனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் சாலைகளை மறித்து இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்துகின்றனர். இது தற்போது வழக்கமாகி உள்ளது. அந்த நேரத்தில் அவசர ஊர்தி, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அதன் காரணமாக பல உயிர்கள் பலியாகி வருகின்றன.

பிரார்த்தனைக்கு மசூதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மசூதிகளில் எழுப்பப்படும் அதிக சத்தம் காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள், ஓய்வு எடுப்பவர்கள், பள்ளியில் பாடம் கற்கும் மாணவர்கள், பாடம் நடத்தக் கூடிய ஆசிரியர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீளமாக உள்ளது. நீங்கள் பொது மக்களின் பிரச்சினைகள் குறித்து மிக ஆர்வமாக இருப்பதால், இது பற்றியும் நீங்கள் விளம்பரம் எடுக்க முன்வரவேண்டும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் ஒரு இந்து சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், பல நூற்றாண்டுகளாக இந்துக்கள் அனுபவித்துவரும் பாகுபாட்டை உணர்வீர்கள் என்று நான் நினைக்கிறேன்" என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp mp say about ceat add


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->