காமுகர்களைக் கட்சியில் வைத்துக் கொண்டிருப்பதற்குத் முக ஸ்டாலின் அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் - வானதி சீனிவாசன்! - Seithipunal
Seithipunal


பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "திமுக அரசு எப்பொழுது ஒழிகிறதோ, அப்பொழுது தான் பெண்களின் பாதுகாப்பு உறுதியாகும்!

சென்னை முதல் டெல்லி வரை செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த திமுக கவுன்சிலர் பிரபாகரன் என்பவர், விமானத்தில் இருந்த பணிப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது மட்டுமன்றி தமிழகத்திற்கே அவமானகரமானது.

திமுகவினர் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதற்கு மற்றொரு உதாரணமாகத் திகழும் இச்சம்பவத்தை இந்திய வரலாறு ஒருபோதும் மறக்கப் போவதுமில்லை, மன்னிக்கப் போவதுமில்லை. இப்படிப் பெண்களைக் குறிவைக்கும் காமுகர்களைக் கட்சியில் வைத்துக் கொண்டிருப்பதற்குத் முக ஸ்டாலின் அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தொடர்ந்து தமிழகத்திற்குத் தலைகுனிவைத் தேடித்தரும் திமுக போன்ற ஒரு கயவர் கூட்டத்தை ஆட்சியில் அமர வைத்ததற்காக ஒட்டுமொத்த தமிழகப் பெண்களும் வருந்துகின்றனர். இனி எங்காவது “ஸ்டாலின் ஆட்சியில் பெண்கள் முன்னேற்றம்” என உடன்பிறப்புகள் வாயைத் திறக்கட்டும், பிறகு தெரியும் பெண்களின் பலம் என்னவென்று" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP MLA Vanathi Srinivasan condiment to DMk mk stalin


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->