காலைலயே பாஜகவினரை பதறவைத்த சம்பவம்! மாரடைப்பால் மரணம்., வெளியான அதிர்ச்சி செய்தி!
BJP MLA arvind giri death
உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ அரவிந்த் கிரி இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள கோலா கோக்ரநாத் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ அரவிந்த் கிரி.
அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக அரவிந்த் கிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக லக்னெளவுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, சீதாபூர் அருகே செல்லும் வழியில் எம்எல்ஏ அரவிந்த் கிரி மாரடைப்பால் உயிரிழந்தார். இது பாஜகவினர் மதிதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாஜக எம்எல்ஏ அரவிந்த் கிரி-யின் மறைவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
"அரவிந்த் கிரி அவர்களின் மறைவு துரதிர்ஷ்டவசமானது. இது அளவிட முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
கடவுள் ஸ்ரீராமர் தனது காலடியில் அவருக்கு இடம் கொடுக்கட்டும், ஓம் சாந்தி" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP MLA arvind giri death