சேகர்பாபுவா..? அல்லேலூயா பாபுவா..? பாஜகவின் எச்.ராஜா கடும் விமர்சனம்..!! - Seithipunal
Seithipunal


பாஜகவின் தேசிய செயலாளரும் மூத்த நிர்வாகியுமான எச்.ராஜா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "அறநிலையத்துறை வழக்கறிஞர் கார்த்திகேயனிடம் அபிடவிட் கொடுத்துள்ளேன். ஆளுநரிடம் 2000 இந்து கோயில்கள் தொடர்பான கோரிக்கை புகார் கொடுத்திருந்தேன். அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத்துறை ஆணையருக்கு தமிழக ஆளுநர் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பான கடிதம் 2 நாட்களுக்கு முன்பு தான் அறநிலையத்துறை ஆணையரிடமிருந்து வந்தது. 

திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. ஆனால் 2000 கோயில்கள் தொடர்பான மனு அளித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு அதற்கான பரிசீலனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக பதில் வந்துள்ளது. தமிழகத்தில் எத்தனை இந்து கோயில்கள் உள்ளது என அரசாங்கத்திற்கு தெரியாது. நீதிமன்ற உத்தரவில் தமிழகத்தில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் அறநிலையத்துறையின் கீழே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொள்கை விளக்க குறிப்பில் தமிழகத்தில் 36 ஆயிரம் கோயில்கள் இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு சொல்லியுள்ளார். அவர் சேகர்பாபுவா..? அல்லது அல்லேலூயா பாபுவா..? என எனக்கு தெரியவில்லை. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட கொள்கை விளக்க குறிப்பில் இந்து கோயில்களுக்கு 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தானமாக கொடுத்திருக்கிறார்கள்.

அவ்வாறு கொடுக்கப்பட்ட நிலங்கள் இப்பொழுது பார்த்தீங்கன்னா 4.75 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. அப்படி என்றால் மீதமுள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலம் என்ன ஆச்சு..?? ஹிந்து கோயில்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை பலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இந்த அல்லேலுயா பாபு ஏதாவது நடவடிக்கை எடுத்து இருக்கிறாரா..??. இந்த அரசாங்கம் இந்துக்களின் சொத்துக்களை கொள்ளை அடிக்கிறது" என செய்தியாளர்கள் சந்திப்பில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP leader HRaja criticized TNHRCE Minister Sekarbabu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->