"திருமாவளவன் யாருடைய பிள்ளை?" - குஷ்பு ஆவேசம்!
BJP Khushboo tvk vijay ntk Seeman vck thirumavalavan
சென்னையில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் அஞ்சலி செலுத்திய பாஜக துணைத்தலைவர் குஷ்பு, விசிக தலைவர் திருமாவளவனின் கருத்துகளுக்குக் கடுமையான பதிலடி கொடுத்தார்.
"இந்துக்களை ஏன் குறிவைக்கிறீர்கள்?"
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் எய்ம்ஸ் வருமா என்ற திருமாவளவனின் கேள்விக்கு, "ரம்ஜான் அல்லது கிறிஸ்துமஸ் கொண்டாடினால் எய்ம்ஸ் வந்துவிடுமா?" என அவர் திருப்பிக் கேட்டார். இந்து மெஜாரிட்டி என்பதால் தொடர்ந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் குற்றம் சாட்டிய குஷ்பு, கூட்டணியில் உள்ளவர்கள் ரகசியமாகப் பூஜை செய்வதாகவும், வெளியே முற்போக்கு பேசுவதாகவும் விமர்சித்தார்.
அரசியல் பதிலடி:
பிள்ளை சர்ச்சை: விஜய் மற்றும் சீமானை ஆர்.எஸ்.எஸ் பிள்ளைகள் எனக் கூறும் திருமாவளவன், தான் திமுக அல்லது காங்கிரஸின் பிள்ளையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
பெயர் மாற்றம்: காங்கிரஸ் ஆட்சியில் ராஜீவ் காந்தி பெயரில் திட்டங்கள் வந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், பாஜக மோடி பெயரில் எதையும் சூட்டவில்லை எனத் தெரிவித்தார்.
EVM முரண்பாடு: ராகுல் காந்திக்கும் கார்த்தி சிதம்பரத்திற்கும் இடையே வாக்கு இயந்திரம் குறித்துத் தெளிவான புரிதல் இல்லை எனச் சாடினார்.
கூட்டணி மற்றும் தொகுதிகள்:
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 23 இடங்கள் ஒதுக்கப்படுவதாக வெளியான செய்திகள் வெறும் வதந்திகள் மட்டுமே என மறுத்தார். "விரைவில் டெல்லி சென்று பியூஷ் கோயலைச் சந்திக்க உள்ளேன். தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி மற்றும் மாநிலத் தலைவர் விரைவில் வெளியிடுவார்கள்" எனத் தெரிவித்தார்.
English Summary
BJP Khushboo tvk vijay ntk Seeman vck thirumavalavan