very wrong bro! முதல்வர் விஜய்க்கு ஹெச்.ராஜா விடுத்த கண்டனம்!
bjp h raja condemn to cm vijay
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச் ராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "What bro? This very wrong bro ! தமிழகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த பாரதமும் உணர்வுப்பூர்வமாக கொண்டாடி மகிழும், ஆனைமங்கல செப்பேடுகள் குறித்து, 36 மணிநேரம் முழுதாக கடந்துவிட்ட பிறகும் கூட முதல்வர் திரு.ஜோசஃப் விஜய் அவர்களிடம் இருந்து இதுவரை ஒரு வாழ்த்துச் செய்தியோ அல்லது வரவேற்புச் செய்தியோ வராததன் காரணம் என்ன?
முதலாம் ராஜராஜ சோழரின் அடையாளச் சின்னமாகவும், 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரம்பரிய வரலாற்றுப் பெட்டகமாகவும் விளங்கும் "ஆனைமங்கல செப்பேடுகள்" பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நம் தாயகம் திரும்பியது தமிழக முதல்வருக்கு பிடிக்கவில்லையா? ஒருவேளை நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் சீரிய முயற்சியினால் அப்பொக்கிஷம் மீட்டெடுக்கப்பட்டதில் முதல்வர் மிகுந்த வருத்தத்தில் உள்ளாரா?
அதனால் தான், தனது கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி பழம்பெருமைமிக்க ஆனைமங்கல செப்பேடுகள் மீது சேற்றை வாரி பூசுவதை கண்டிக்காமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறாரா? தமிழர்களின் அடையாள மீட்டலை அமைதியாக கடந்து செல்லும் ஒருவர் எப்படி தமிழகத்தின் முதல்வராக பொறுப்புடன் பணியாற்றி நமது பாரம்பரியத்தை பாதுகாப்பார்? என்று தெரிவித்துள்ளார்.
English Summary
bjp h raja condemn to cm vijay