அரசு நிலத்தை அபகரித்த பாஜக நிர்வாகி தலைமறைவு? வெளியான பகிர் தகவல்!
BJP district president absconding in govt land grabbed case
கோவை மாவட்டம் விளாங்குறிச்சி கொடிசியா அருகே பிஎஸ்ஜி குழுமத்திற்கு சொந்தமான 45.82 ஏக்கர் பூர்வீக நிலத்தை உபரி நிலம் என அறிவித்தனர். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது.
இந்த நிலையில் கோவிந்தராஜின் வாரிசுகள் சிவக்குமார், பாலாஜி மற்றும் க்ரீன் வேல்யூ ஷெல்டர்ஸ் தரப்பில் அந்த நிலத்தை தங்களது பெயரில் பட்டா வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரமன்லால் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணையின் போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிலம் மீட்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் ஆய்வு செய்ததில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் பல வீடுகளைக் கட்டி ஆக்கிரமிப்பு செய்தது தெரிய வந்தது.
அரசு நிலத்தை அவர்களின் பெயருக்குச் சட்டவிரோதமாக மாற்றம் செய்திருக்கின்றனர் என தனது வாதத்தை முன் வைத்தார். அதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் கூட்டணி வைத்து திட்டமிட்டு அரசு நிலங்களை அபகரிப்பதும், விதிமீறல்களில் கட்டுமானம் கட்டுவதும் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.

அரசு நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களாக இருந்து கொண்டு இது போன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்பதோடு அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து அங்கு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை 4 வாரங்களில் அப்புறப்படுத்தி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் கோவை மாவட்ட பாஜக தலைவர் அண்ணாமலை யாத்திரையில் பங்கேற்று இருந்த பாலாஜி உத்தம ராமசாமியின் காதிற்கு இந்த செய்தி எட்ட அதிர்ச்சி அடைந்து நடைபயணத்தில் இருந்து பாதியிலேயே எஸ்கேப் ஆகியுள்ளார். இந்த சம்பவம் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் மறுநாளே கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாலாஜி உத்தம ராமசாமி கலந்து கொண்டார். அதன் பிறகு பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகிவிட்டதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
BJP district president absconding in govt land grabbed case