#BigBreaking || அதிமுகவின் அடிமடியில் கைவைக்கும் பாஜக., சற்றுமுன் ஓபிஎஸ்- இபிஎஸ் அவசர ஆலோசனை.!  - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக - பாஜக இடையேயான இடப்பங்கீடு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வந்த இந்த கூட்டணி இடப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக அதிமுக தரப்பிலிருந்தும், பாஜக தரப்பில் இருந்தும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிமுகவின் தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவலின்படி, அதிமுக போட்டியிடக் கூடிய முக்கியமான இடங்களை பாஜக கேட்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் ஒரு தகவலாக, பாஜக தரப்பில் அப்படி கேட்க கூடிய அந்த இடங்களைத் தர வேண்டும் என்றால்., நிச்சயமாக அந்த இடங்களில் பாஜக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்றும், அதிமுக போட்டியிட கூடிய இடங்களில் பாஜக தனித்து போட்டியிட கூடாது என்று அதிமுக தரப்பில் நிபந்தனை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அதிமுக - பாஜக இடையே கூட்டணி தொகுதி பங்கீடு முடிவுக்கு வரும் என்றும், விரைவில் இன்று மாலை அல்லது நாளைக்குள் இந்த கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்ற என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp demand admk heads urgent meet


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->