இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க? உதயநிதிக்கு அண்ணாமலை கண்டனம்!
BJP Annamalai reply to udhay
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி! என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்தி குறிப்பில், "இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க?
சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்?
தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு பேசியிருக்கலாமே. கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே. நீங்க தான் ரொம்ப Dhil-லான ஆள் ஆச்சே.
ஏன் அப்போ வண்டில இடம் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரின் முந்தைய பதிவை காண்க,
English Summary
BJP Annamalai reply to udhay