குழப்பத்தில் திருமாவளவன்.. CM ஸ்டாலினுக்கு இதில் தொடர்பில்லையா? அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
BJP Annamalai DMK VCK Thirumavalavan
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, “விஜய் அரசியலுக்கு வந்த பிறகு திருமாவளவனின் மன ஓட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தவறு செய்த பிறகு தப்பிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்., பாஜக மீது பழி கூறுவது, திருமாவளவன் நிறுத்த வேண்டியது அவசியம்.
திமுகவை தோற்கடிக்க சில நேரங்களில் கோட்பாட்டை விட்டு கூட்டணி அமைக்கலாம். ஆனால் தலைமை நீதிபதி மீது தாக்குதல், வழக்குரைஞர் மீது தாக்குதல், கார் மீதான தாக்குதல் போன்றவற்றிற்கு ‘நான் காரணம் அல்ல’ என்று சொல்லி தப்பிக்க முயற்சிப்பது, தமிழக அரசியலில் சாபக்கேடு எனும் விளைவுகளை தருகிறது.
சாதிகளுக்கு எதிராகவே செயல் படுவதாக கூறிக் கொண்டு, சாதிப் பெயரில் அரசியல் நடத்துகிறது திமுக. இப்படி அரசியலை பயன்படுத்தும் தலைவர்களின் நடவடிக்கைகள் தவறானது.
இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக, முதல்வருக்கு நேரடியாக பதிலளிக்க பொறுப்பு உள்ளது. ஆனால் அரசு, இரு அதிகாரிகளை இடைநீக்கம் செய்துவிட்டு, முதல்வர் இதில் தொடர்பில்லையென வெளிப்படுத்தும் மாயத்தோற்றத்தை உருவாக்கியுள்ளது என அண்ணாமலை குறிப்பிட்டார்.
English Summary
BJP Annamalai DMK VCK Thirumavalavan