திமுக நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்களை ஏமாற்றி அழைத்துவந்த கவுன்சிலர் - அண்ணாமலை கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


திமுகவின் கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க அரசுப் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியதது கடும் கண்டனத்துக்குரியது என்று பாஜக முன்னாள தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கோவை மாவட்டம் பொள்ளாச்சி சமத்தூர் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை, நான் முதல்வன் திட்டம் என்று பொய் கூறி திமுக கட்சி நிகழ்ச்சிக்கு வர வற்புறுத்தியிருக்கிறார் அந்தப் பகுதி திமுக கவுன்சிலரின் கணவர்.


 
கட்டட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசுப் பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு. பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை.

இந்த நிலையில், திமுக கட்சி நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க, அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்த முயற்சிக்கும், திமுகவின் அகங்காரச் செயல்பாட்டினை, வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->