நிதி நெருக்கடி: சம்பள பிரச்சினையால் விலகிய பிரபல நடிகர்கள்: பாதியில் நிறுத்தப்பட்ட அக்சய் குமாரின் படம்..! - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவூட் நடிகர் அக்சய் குமாரின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற படம் 'வெல்கம் டு தி ஜங்கிள்'. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடுமையான நிதி நெருக்கடியினால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

'வெல்கம் டு தி ஜங்கிள்' பிரபலமான 'வெல்கம்' படத்தின் மூன்றாவது பாகமாகும். கடைசியாக ஆகஸ்ட் 2023-இல் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் கடந்த மாதங்களாக படப்பிடிப்புகளில் பெரிய முன்னேற்றத்தைக் காணவில்லை.

படத்தில் பெரிய நட்சத்திரங்கள் உள்பட நடிகர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் படத்திலிருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் சுனில் ஷெட்டி, அர்ஷத் வார்சி, பரேஷ் ராவல், ஜானி லீவர், ராஜ்பால் யாதவ், துஷார் கபூர், ஷ்ரேயாஸ் தல்படே, க்ருஷ்ணா அபிஷேக், கிகு ஷர்தா, தலேர்,மெஹந்தி, மிகா சிங், ராகுல் தேவ், முகேஷ் திவாரி, ஷரிப் ஹாஷ்மி, இனாமுல்ஹக், ஜாகிர் ஹுசைன், யஷ்பால் சர்மா, ரவீனா டாண்டன், லாரா தத்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், திஷா பதானி மற்றும் வ்ரிஹி கோட்வாரா ஆகியோர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Famous actors quit due to salary issues Akshay Kumar film was stopped halfway


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->