ரீபிட்டு! கும்பி எரியுது, குடல் கருகுது, கட்அவுட் ஒரு கேடா? - CM ஸ்டாலினுக்கு குவியும் கண்டனங்கள்! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில துணை தலைவர் அநாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அராஜகத்தின் உச்சக்கட்டம், ஆணவத்தின் வெளிப்பாடு. 

இதே பகுதியில் இதே கட்-அவுட்டால் சுபஸ்ரீ என்ற பெண்ணின் மரணத்தின் போது  எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்த போது கூறிய வார்த்தைகளை நினைத்து பார்த்து மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும் முதலமைச்சர் அவர்கள்.

முன்னுதாரணமாக திகழ வேண்டியவர், அதிகாரம் கைக்கு வந்ததும் தவறிழைப்பது முறையல்ல" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

"கும்பி எரியுது, குடல் கருகுது, கட்அவுட் ஒரு கேடா” 
"கட்-அவுட் கலாசாரத்திற்கு கெட்-அவுட்"
முக ஸ்டாலினின் வீர வசனங்கள். Oct 2017.

தொடர்ந்து விபத்துக்கள், தொடர்ந்து உயிரிழப்புகள். என்ன நடந்தாலும், நீதிமன்றங்கள் எத்தனை குட்டு வைத்தாலும் சூடு சொரணை இல்லாமல் தங்கள் சுய விளம்பரம் மட்டுமே முக்கியம் என்று பேனர் மற்றும் கொடிகளை சாலைகளிலும் நடைபாதைகளிலும் வைத்து  மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்  சமூக விரோதிகளை எப்பொழுது கைது செய்வீர்கள்? என்று தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP and Arappor Iyakkam condemn to DMK MK Stalin Udhay


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->