வடகிழக்கு பருவமழைக்கு முன் -முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் அதிரடி முன்னெச்சரிக்கை திட்டங்கள்...! - Seithipunal
Seithipunal


அக்டோபர் மாதம் 2வது வாரம் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தமிழக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.“மழை எவ்வளவு பெய்தாலும் மக்களுக்கும், அவர்களின் சொத்துகளுக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது” என்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பில், நகராட்சி நிர்வாகம் மாநிலம் முழுவதும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.


அதன்படி மேற்கொள்ளப்படும் முக்கிய முன்னெச்சரிக்கை பணிகள்:
மழைநீர் சீராக ஓடுவதற்காக அனைத்து கால்வாய்கள், வடிகால்கள் முழுமையாக தூர்வாரப்படும்.
நீர்நிலைகள், சாலைகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக், மணல் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்படும்.
சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் அனைத்தும் அக்டோபர் 15-க்குள் முழுமையாக மூடப்படும்.
மழையில் சாயக்கூடிய மரங்கள், இடிந்து விழும் அபாயத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் உடனடியாக அகற்றப்படவோ, உரிமையாளர்களால் சரி செய்யப்படவோ செய்யப்படும்.
ஆம்புலன்ஸ் மற்றும் அவசர வாகனங்கள் செல்லும் முக்கிய சாலைகள் சிறப்பாக பராமரிக்கப்படும்.
குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்து, தடை இல்லாமல் குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும்.
நீர் தேங்கும் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அங்கு சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
வார்டு வார்டாக தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்படும்.
கொசு வளர்ச்சி தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்; சுகாதார நிலையங்களில் போதுமான மருந்துகள் கையிருப்பு வைக்கப்படும்.
மின்சாரம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து ஒருங்கிணைந்த பணிகளை மேற்கொள்ளும்.
சென்னை மாநகராட்சியிலும் ஏற்கனவே சிறப்பு முன்னெச்சரிக்கை பணிகள் துவங்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Before the Northeast Monsoon MK Stalins governments proactive precautionary plans


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->