ISRO இயக்கும் மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்கள்...! - 2026 முதல் விண்வெளியில்
ISROs bodyguard satellites in space from 2026
விண்வெளியில் இன்று 105 நாடுகளைச் சேர்ந்த 12,149 செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றி பயணித்து வருகின்றன. இவற்றில் இந்தியா, சீனா, ஐக்கிய நாடுகள்,ஜெர்மனி, கனடாஅமெரிக்கா, ரஷியா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இத்தாலி அதிக செயற்பாட்டுடைய நாடுகளாக உள்ளன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தற்போது 56 செயற்கைக்கோள்களை பூமி கண்காணிப்பு, தகவல் தொடர்பு, அறிவியல் ஆய்வு மற்றும் வானிலை கண்காணிப்புக்காக செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் அண்டை நாட்டின் செயற்கைக்கோள் இந்தியாவின் செயற்கைக்கோளுக்கு அருகில் வந்த சம்பவம், விண்வெளி பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தியது.

இதனால் இந்திய அரசு “மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்” திட்டத்தை உருவாக்கி, ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பில் 50 மேம்பட்ட பாதுகாப்பு செயற்கைக்கோள்களை பூமி சுற்றுப்பாதையில் இயக்க திட்டமிட்டுள்ளது. மேலும், 2026 முதல் விண்ணில் ஏவப்பட உள்ள இவை, ISRO மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படப்போகின்றன.
இதில் அதிநவீன சென்சார்கள் மற்றும் லேசர் தொழில்நுட்பத்துடன், சிக்னல் ஜாம்மிங், சைபர் தாக்குதல், எதிரி செயற்கைக்கோள் குறுக்கீடு போன்ற அச்சுறுத்தல்களை கண்டறிந்து பதிலளிக்கும் திறனை கொண்டிருக்கும்.
அதுமட்டுமின்றி, ஒளி கண்டறிதல் மற்றும் 3D வரைபட தொழில்நுட்பம் மூலம் விரைவான மற்றும் துல்லியமான அச்சுறுத்தல் கண்காணிப்பு சாத்தியமாகும்.இந்த திட்டம் இந்தியாவின் விண்வெளி பாதுகாப்பை ஒரு புதிய நிலைக்கு உயர்த்தும் என்று ISRO விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
English Summary
ISROs bodyguard satellites in space from 2026