இன்றைய ராசிபலன் - 24 செப்டம்பர் 2025 - Seithipunal
Seithipunal


இன்றைய ராசிபலன் – 24 செப்டம்பர் 2025
மேஷம்
கமிஷன் துறையினருக்கு லாப வாய்ப்பு உள்ளது. தம்பதியர்களிடையே சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்; மிதமான பொறுமையுடன் சூழலை சமாளிக்கவும். வேலை பளு அதிகரிக்கும்; கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கரும் – பச்சை
ரிஷபம்
உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சகோதரர்களின் உதவி உண்டு. வியாபாரத்தில் புதிய அணுகுமுறை அதிக லாபத்தைத் தரும். சிறிய பயணங்கள் ஏற்படும். ஏஜென்ட்களுக்கு நன்மை.
அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்


மிதுனம்
குடும்பத் தலைவர்கள் ஆடை, ஆபரண சேர்க்கை செய்வர். சிலர் புதிய நகை திட்டத்தில் பணம் சேகரிக்க துவங்குவர். வெளியூர் பயணம் சிறந்த பலன்களை தரும். அலுவலகத்தில் நிம்மதி நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
கடகம்
வேலை பளு அதிகரிக்கும். பண வரவு சரியானது; செலவு அதிகரிக்கும். சிக்கனமான நடவடிக்கைகள் தேவை. பூர்வீக சொத்து பெறும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்
சிம்மம்
பெண்களுக்கு வீட்டு செலவு அதிகரிக்கும்; வெளியூர் பயணம் வெற்றியை தரும். பண வரவு சீராக இருக்கும்; உடல் பளிச்சிடும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வெளிநபர்களுடன் வாதம் தவிர்க்க வேண்டும். வேலை ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கன்னி
தம்பதியர்களிடையே அன்பு மேம்படும். காதலில் சிக்காமல் இருக்கவும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். திடீர் பயணங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உண்மையான பாசத்தை புரிந்துகொள்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
துலாம்
வேலை பெண்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கதவைத் தட்டும். வியாபாரம் சீராக நடைபெறும். உடல் உற்சாகம், பொலிவு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
விருச்சிகம்
தம்பதியர்கள் நெருங்கி அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மாணவர்களுக்கு பகுதி நேர வேலை கிடைக்கும். வேலை மதிப்பு உயரும். விருந்துகளில் கலந்துகொள்வீர்கள். திருமண முயற்சி பலிதமாகும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
தனுசு
ஆன்மீக யாத்திரை பயணம் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் நன்மை கிடைக்கும். வியாபாரிகள் நிரந்தர நிறுவனங்களுக்கு மட்டுமே கடனாக பொருட்கள் கொடுக்கலாம். பிள்ளைகளுக்கு படிப்பு வசதி ஏற்படுத்தவும். பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மகரம்
குடும்ப மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளுக்கு அளவுக்கு மேல் செல்லம் கொடுக்காமல் இயல்பான வாழ்க்கை கற்பிக்கவும். தம்பதிகளிடையே பிணக்கம் நீங்கும். உடல் நலம் பலப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கும்பம்
தம்பதியர்களின் ஒற்றுமை மேம்படும். சிலருக்கு கௌரவ பதவி கிடைக்கும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஷேர் மூலம் வருமானம் ஏற்படும். அரசியல்வாதிகள் கட்சித் தலைவரின் நம்பிக்கையைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மீனம்
பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் புதிய முயற்சிகளை துவங்கலாம். ரேவதி நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்; புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்று.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

todays raasipalan


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->