'என்கிட்ட இருக்கிற 5 லட்சமே போதும், வாழ்ந்துடலாம்'...! - முதலீடு செய்ய பயப்படும் நடிகை நிகிலா விமல்...! - Seithipunal
Seithipunal


திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்றாலே ஆடம்பரமான வாழ்க்கை, விலை உயர்ந்த கார்கள், கண்களைக் கவரும் ஆடைகள் என வசதிகளுக்கு மத்தியில் வாழ்பவர்கள் என்ற எண்ணம் பலரிடமும் இருக்கிறது. ஆனால், பணம் சம்பாதிப்பதிலும் அதைப் பாதுகாப்பதிலும் தனக்கிருக்கும் எளிமையான அணுகுமுறையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை நிகிலா விமல்.பணம் சேமிப்பது, முதலீடு செய்வது தொடர்பான கேள்விக்கு அவர் அளித்த பதில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பணத்தை முதலீடு செய்து பல மடங்காகப் பெருக்குவதில் தனக்குப் பெரிய ஆர்வம் இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.இதுகுறித்து நிகிலா விமல் பேசுகையில், “பணம் சேமிப்பது போன்ற விஷயங்களில் நான் அவ்வளவு சிறந்தவள் கிடையாது. பணத்தை எங்கும் முதலீடு செய்யும் பழக்கமும் எனக்கு இல்லை. அதே நேரத்தில், தேவையில்லாமல் செலவு செய்யாமல் பணத்தைச் சேமித்து வைப்பேன்.

அந்த வகையில் என்னைக் கஞ்சத்தனமானவள் என்றுகூடச் சொல்லலாம். ஆனால், கையில் இருக்கும் பணத்தை எப்படிப் பல மடங்காகப் பெருக்குவது என்பது எனக்குத் தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.பணத்தைப் பெருக்குவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அதில் ஏற்படக்கூடிய இழப்புகளை நினைத்துப் பயப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள நிகிலா விமல், தனது குடும்பத்தினரும் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பணத்தைப் பொறுத்தவரை நானும் எனது குடும்பத்தினரும் இன்னும் பழைய சிந்தனையில்தான் இருக்கிறோம். உதாரணமாக, என்னிடம் ஐந்து லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பணத்தை ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால், பத்து லட்சமாக மாற்றிவிடலாம் என்று ஒருவர் சொன்னால், முதலில் என் அம்மாவுக்குப் பயம் வந்துவிடும்.

எனக்கும் அதே பயம்தான் ஏற்படும்.கையில் இருக்கும் ஐந்து லட்சம் ரூபாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற ஆசையில், இருக்கும் பணத்தையும் இழந்துவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய எண்ணம். கிடைத்த பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கே முக்கியத்துவம் கொடுப்போம்” என்று மனம் திறந்துள்ளார்.பணத்தின் மீது அளவுக்கு அதிகமான ஆசை இல்லாத தனது வாழ்க்கை முறையைப் பற்றியும் நிகிலா விமல் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

கையில் இருக்கும் பணத்தைப் பாதுகாப்பதே தனக்கு மனநிம்மதியைத் தருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதை இரட்டிப்பாக்கவோ பல மடங்காக உயர்த்தவோ வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், “பணத்தைப் பெருக்க வேண்டும் என்ற ஆசையைவிட, என்னிடம் இருக்கும் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கே நான் முக்கியத்துவம் அளிப்பேன்.

என்னிடம் ஐந்து லட்சம் ரூபாய் இருந்தாலே, அதை வைத்துக்கொண்டு என் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துவிட முடியும் என்று நினைக்கிறேன். அதை பத்து லட்சமாகவோ, இருபது லட்சமாகவோ மாற்ற வேண்டும் என்ற பேராசை எனக்கு இல்லை. பணத்தைப் பெருக்குவதில் ஒருவிதமான அச்சம் எனக்குள் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

முதலீடு செய்வதில் தனக்கு ஆர்வம் இருந்தாலும், அதனால் ஏற்படக்கூடிய இழப்புகள் குறித்துத் தெரிந்துகொள்ளவே பயப்படுவதாக நிகிலா விமல் தெரிவித்துள்ளார். சில நேரங்களில் முதலீட்டு ஆலோசனை வழங்கும் நிறுவனங்களைத் தானாகவே தொடர்புகொண்டு பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “சில நேரங்களில் நானே முதலீட்டு ஆலோசனை நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பேசுவேன். முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இருக்கிறது. ஆனால், அவர்களிடம் பேசும்போது முதலீட்டில் இருக்கும் சிக்கல்கள், ஆபத்துகள், இழப்புகள் குறித்து என்னிடம் விளக்க வேண்டாம் என்று சொல்லிவிடுவேன்.

ஏனென்றால், அவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டாலே எனக்குப் பயம் வந்துவிடும்” என்று தனது இயல்பான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார்.பணத்தைச் சம்பாதிப்பது மட்டுமின்றி, அதைச் சரியான முறையில் முதலீடு செய்து வளர்ப்பதும் முக்கியம் என்று பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், முதலீட்டில் இருக்கும் அபாயங்களை எதிர்கொள்ளத் தயங்கும் தனது மனநிலையை நடிகை நிகிலா விமல் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

பணத்தைப் பெருக்குவதைவிட, இருப்பதைப் பாதுகாத்துக்கொண்டு நிம்மதியாக வாழ்வதே முக்கியம் என்ற அவரது கருத்து ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I have 5 lakhs I can live Actress Nikila Wimal is afraid of investing


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->