சென்னையில் மேகவெடிப்பு ஏற்படவில்லை: வானிலை ஆய்வு மையம் விளக்கம்!
No Cloudburst in Chennai Meteorological Department Clarifies
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகளில் நிலவிய மேலடுக்கு சுழற்சியின் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெருமழை பெய்தது.
வளிமண்டலத்தில் நிலவிய சாதகமான சூழ்நிலைகள், ஆழமான வெப்பச்சலன மேகங்கள் உருவாகவும் தீவிரமடையவும் வழிவகுத்தன.
20 முதல் 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், ஒரு மணி நேரத்தில் 100 மி.மீ அல்லது அதற்கு மேல் மழை பெய்வதே மேக வெடிப்பு (Cloudburst) என்று அழைக்கப்படுகிறது.
ஆனால், தற்போது நிலவிய வானிலைச் சூழ்நிலை மற்றும் மழைப்பொழிவின் தன்மையை வைத்து ஆராயும்போது, சென்னையில் மேகவெடிப்பு ஏற்படவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
No Cloudburst in Chennai Meteorological Department Clarifies