'வார்த்தைகளில் நிதானம்...வம்புக்குப் போகாதீங்க'...! - திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு...!
Be moderate your words dont get into fuss Chief Minister MK Stalin drastic order DMK members
தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அபார வெற்றியை பதிவு செய்து 108 தொகுதிகளில் கைப்பற்றி அரசியல் அரங்கில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியை அமைத்துள்ளது.
இதையடுத்து, விஜய் தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராக பதவியேற்று அரசியல் பயணத்தின் அடுத்த கட்டத்தை தொடங்கியுள்ளார். அவரது தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் முக்கிய பங்கு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, தவெக அமைச்சரவையில் காங்கிரசுக்கு 2 அமைச்சரவை இடங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1 அமைச்சர் பதவி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 1 அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மொத்தமாக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 4 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த அரசியல் நகர்வின் காரணமாக, தற்போது திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் விரைவில் அங்கிருந்து விலகி தவெக அணியில் இணையும் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.இதற்கிடையில், திமுக கூட்டணியில் இடம்பெற்று பின்னர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளை திமுக தரப்பு கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீது திமுக எம்.பி. ஆ. ராசா கடுமையான கருத்துகளை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ள கருத்துகள்,"முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’
மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’
வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு
முட்டுக் கொடுக்குமென்றால்;
பூ முடத்தவனை பறந்தள்ளி
புணர்ச்சிக்கு வேறிடம்
தேடுவதில் தவறில்லை!
பெரியாரின்
காலதேச வர்த்தமான’ தத்திற்கு
காத்திருப்போம் ; என்றாலும்
களமாடுவோம் !
வெற்றி நமக்கே!
இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்து.
இந்த பதிவுக்கு கடும் விமர்சனம் எழுந்த நிலையில் இந்த பதிவை ஆ.ராசா நீக்கினார். பின்னர், ஆ.ராசா வெளியிட்ட மற்றொரு எக்ஸ் பதிவில்,
என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மு.க. ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு அமைதியும் அரசியல் நாகரிகமும் கடைப்பிடிக்க வேண்டுமென உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.அந்த பதிவில், “ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தங்களது அரசியல் பாதையையும் முடிவுகளையும் சுயமாக தீர்மானிக்கும் ஜனநாயக உரிமை உள்ளது.
ஆகையால், தற்போதைய அரசியல் சூழலில் யாரையும் மனவருத்தமடையச் செய்யும் வகையில் கடுமையான வார்த்தைகளையோ, தரக்குறைவான விமர்சனங்களையோ கழகத் தோழர்கள் பயன்படுத்த வேண்டாம் என்பது உங்கள் தலைவராக எனது அன்பான வேண்டுகோள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய அரசியல் பண்பாட்டின் வழியில் பயணித்து வரும் இயக்கம் தான் திமுக. அந்த உயரிய அரசியல் மரபையும், நாகரிக அரசியல் பண்பையும் எந்த சூழலிலும் நாம் மறந்துவிடக் கூடாது” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், நல்ல செயல்களை மனதார பாராட்டியும், தவறுகளை ஆக்கப்பூர்வமாக சுட்டிக்காட்டியும் செயல்படும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக திமுக தொடர்ந்து செயல்படும் என மு.க. ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Be moderate your words dont get into fuss Chief Minister MK Stalin drastic order DMK members