தைரியமாக இருங்கள்...! உங்களுக்கு நீதி கிடைக்கு வரை துணை நிற்போம்...! - அஜித்தின் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்த இபிஎஸ்
Be brave We will stand by you until you get justice EPS consoles Ajiths mother
சிவகங்கையில் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கைப்பேசி அழைப்பு மூலம் ஆறுதல் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி:
அப்போது அவர் தெரிவித்ததாவது,"துரதிர்ஷ்டவசமாக சில மனித மிருகங்கள் கடுமையாக தாக்கியதால் உங்கள் மகன் அஜித் குமார் உயிரிழந்திருக்கிறார். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை, அதிமுக உங்களுக்கு துணை நிற்கும். நாங்களும் துணை நிற்போம்.
இது மீள முடியாத துயரம். ஒரு தாய் தன்னுடைய மகனை இழப்பது என்பது கொடுமையான விஷயம். இது யாராளும் மன்னிக்க முடியாதது. பெற்ற தாய்க்கு மட்டுமே அதன் வலி தெரியும்.
உங்களுக்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது. இருந்தாலும், நீங்கள் மனம் தளராமல் இருந்தால் தான் வீட்டில் உள்ளவர்களும் மனம் நிம்மதியுடன் இருப்பார்கள்.
நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். நீதிமன்றத்தின் மூலம் நீதி நிலைநாட்டப்படும். உங்களுக்கு நியாயம் கிடைக்கும்.மனம் தளராமல் இருங்கல். எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
English Summary
Be brave We will stand by you until you get justice EPS consoles Ajiths mother