சரமாரி கேள்விகள்! 41 உயிரிழப்பு! - கரூர் விபத்தில் ஸ்டாலின் மீது பா.ஜ.க. விசாரணைக் குழு
barrage question 41 deaths BJPs inquiry committee Stalin Karur accident
கடந்த சனிக்கிழமை கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கூட்டத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசு முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்து அறிக்கை கோரியது.

இதேவேளை, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, இந்த விபத்தை விசாரிக்க பா.ஜ.க. எம்.பி.க்கள் குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்பினார். பிரபல நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி ஒருங்கிணைப்பாளராக இருக்கும் இக்குழுவில், பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார் (தெலுங்கு தேசம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழு கரூரில் ஆய்வு செய்து, சம்பவத்தைப் பற்றி பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. குழுவின் பேட்டிகள் தமிழக அரசை குற்றம்சாட்டும் வகையில் அமைந்தன. அதிலும் குறிப்பாக, எம்.பி. தேஜஸ்வி சூர்யா “கூட்டத்தில் கைகள் கத்தியால் கிழிக்கப்பட்டன” என ஒருவரின் வாக்குமூலத்தை குறிப்பிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி. அனுராக் தாக்கூர், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாவது,"கரூரில் நெரிசல் உருவாக வழிவகுத்த காரணிகளை விளக்க வேண்டும்.இந்த நிகழ்விற்கு முன்பும் பின்பும் அரசு மற்றும் காவலர்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
முன்னெச்சரிக்கைகள் இருந்தும் விபத்து நடந்ததற்கு காரணமான குறைபாடுகள் எவை? எதிர்காலத்தில் இத்தகைய துயரங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க அரசு என்ன திட்டமிட்டுள்ளது? எனக் கேட்டுக்கொண்டு, “இந்த சம்பவத்திற்கு நீங்கள் (முதல்வர்) முழுப் பொறுப்பேற்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
barrage question 41 deaths BJPs inquiry committee Stalin Karur accident