புதிய சுவையில் பீட்ரூட் கேசரி.!!
how to make beetroot kesari
தேவையான பொருட்கள்:-
சேமியா,
பீட்ரூட்,
சர்க்கரை,
பால்,
நெய்,
முந்திரி.
செய்முறை:-
பீட்ரூட்டை கழுவி தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ளவும்.
இதையடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒன்றரை கப்பு பால் மற்றும் சேமியாவை சேர்த்து கொதிக்க விடவும்.
சேமியா வெந்ததும் அதில் பீட்ரூட் சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். பால் மற்றும் பீட்ரூட் சாறு சேமியாவுடன் கலந்து வற்றியதும் கலவையை இறக்கி வைக்கவும்.
மற்றொரு சிறிய பேனில் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி சேர்த்து வறுத்து சேமியாவில் கலந்து விட்டால் சுவையான பீட்ரூட் கேசரி தயார்.
English Summary
how to make beetroot kesari