தீபாவளிக்கு இந்த கோதுமை பாதாம் பர்பியை ஒரு முறை செய்து பாருங்கள் - சுவை அப்படி இருக்கும்.!!
how to make gothumai burfi
தேவையான பொருட்கள்:-
கோதுமை மாவு
பாதாம் தூள்
சர்க்கரை
நெய்
பால்
ஏலக்காய் தூள்
ஆப்ப சோடா.
வால்நட்
செய்முறை:-
பாதாம் பருப்பையும் வால்நட்டையும் இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து தோலை நீக்கிவிட்டு பாலுடன் சேர்த்து நன்றாக விழுது போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த விழுது, கோதுமை மாவு, சர்க்கரை, வெண்ணெய், ஏலக்காய் தூள், ஆப்ப சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அப்படியே அடுப்பில் வைத்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
இந்தக் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்து நெய் தடவி தயாராக வைத்துள்ள தட்டில் கொட்ட வேண்டும். அதன் மேல் பதம் தூளை தூவி பின்னர் வேண்டிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான கோதுமை பர்பி தயார்.
English Summary
how to make gothumai burfi