புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமீன் மனு ஒத்தி வைப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த சனிக்கிழமை கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணைபொதுச்செயலாளர் நிர்மல் குமாரின் முன் ஜாமீன் மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது புஸ்ஸி ஆனந்த் தரப்பில், எங்கள் தொண்டர்களை கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றே தாமதமாக வந்தது போல் கூறப்படுகிறது. எப்.ஐ.ஆர்-ரில் தவறான தகவல் உள்ளது. வேலுச்சாமிபுரத்தில் அனுமதி கோரிய போது காவல்துறை மறுத்திருக்கலாம். கூட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியது கரூரில் நடந்தது திட்டமிட்ட செயல் அல்ல, விபத்து என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அரசு தரப்பில், கரூரில் சம்பவம் நடந்தவுடன் தவெகவினர் தப்பி ஓடிவிட்டனர். காத்திருந்தவர்களுக்கு தவெக சார்பில் குடிநீர் வழங்கப்படவில்லை. பெரும்பாலானவர்கள் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. தலைமறைவாவது ஏற்கத்தக்கது அல்ல. விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.

விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால் முன் ஜாமீன் வழங்கினால் விசாரணை செய்வது கடினம். இவர்களின் பொறுப்பற்ற தன்மையால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். முன் ஜாமின் வழங்கக்கூடாது என்றுத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதத்தை கேட்டறிந்த நீதிபதி தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கை ஒத்தி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bussy anand pre bail petition postpond


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->