முதல்வர் உத்தரவின் படி 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்..! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றத்தில் இருந்து அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

அதன் முதல்கட்டமாக கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என்று உத்தரவிட்டார். குறித்த அறிவிப்புக்கு இணங்க இதுவரை 436 கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கடைகளை மூட துறையின் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;

''தமிழக முதல்வர் கடந்த 11 அன்று, கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றின் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடிட அரசாணை பிறப்பிக்கப்பட்டதன் அடிப்படையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ் இன்று (சனிக்கிழமை) தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இன்று வரை 436 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் அவற்றுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை மூடுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் விக்னேஷ், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மூடப்பட்ட மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரிந்து வந்த கடைப்பணியாளர்களின் நலன் பாதிக்கப்படாத வகையில் அருகிலுள்ள மதுபான சில்லறை விண்பனைக் கடைகளில் பணியமர்த்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், அனைத்து சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுக்கூடங்கள் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டுமெனவும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் கடைப்பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

As per the Chief Ministers announcement 436 out of 717 liquor shops have been closed so far


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->