#BREAKING: திமுகவுக்கு "திராணி" இருந்தால்.. என் மீது கை வையுங்கள்..! அண்ணாமலை சவால்..!! - Seithipunal
Seithipunal


"24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்"..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்து வெளியான வதந்திகளுக்கு எதிராகவும், திமுகவை குற்றம் சாட்டியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் தமிழகத்தில் நிலவும் இத்தகைய சூழலுக்கு வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக தமிழர்களை தூண்டிவிடும் வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிரச்சாரம் செய்ததை இதற்கு காரணம் எனவும் திமுக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டதில் எதிரொலியை என குற்றம் சாட்டியிருந்தார்.

அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வதந்திகளை பரப்புதல், இரு பிரிவினருக்கிடைய மோதலை ஏற்படுத்துதல்,  கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில் தன் மீது வழக்கு பதிவு செய்த திறனற்ற திமுக அரசு முடிந்தால் என்னை கைது செய்யவும் என சவால் விடுக்கும் வகையில் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டு இருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்.

பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரலை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன். 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்..!" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு சவால் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arrest if possible Annamalai challenge to DMK


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->