இந்திய இராணுவத்தை உயர்சாதியினர் தான் கட்டுப்படுத்துகின்றனர் - ராகுல்காந்தி சர்ச்சை பேச்சு!
army controlled upper caste Rahul Gandhi controversy speech
பிகாரில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மக்களவைத் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று ஒளரங்கபாத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அங்கு உரையாற்றிய அவர், “இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் உயர்சாதியினர் 10 சதவீதம் பேர் மட்டுமே ராணுவம், நீதித்துறை, பெருநிறுவனங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பதவிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மீதமுள்ள 90 சதவீத மக்களில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் இருப்பினும், அவர்கள் பெரிய பதவிகளில் பிரதிநிதித்துவம் பெறவில்லை” எனக் கூறினார்.
அவர் மேலும், “நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். எத்தனை ஓபிசி, தலித், பெண்கள், சிறுபான்மையினர் வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது. நாட்டின் 90 சதவீத மக்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதென்றால், அரசியலமைப்பை காப்பது சாத்தியமில்லை” என்றார்.
ராகுல் காந்தி, நாட்டின் முக்கிய 500 நிறுவனங்களிலும் பட்டியலினத்தவருக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்பதே சமத்துவமின்மையின் வெளிப்பாடு எனக் குறிப்பிட்டார். இதன்மூலம் சமூக நீதிக்கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்பதை விளக்கினார்.
அவர் பேசிய இந்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ராணுவத்தைப் பற்றிய அவரது கருத்துகள் மீண்டும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளன.
English Summary
army controlled upper caste Rahul Gandhi controversy speech